கட்சி தாவிய ஷாபி ரஹீம் எங்களுடன் இல்லை. கம்பஹாவில்  முஸ்லிம் காங்கிரஸ்  சிராஸ் அஹமட்டுக்கே ஆதரவு

மல்வானையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் திட்டவட்டம்.

(பர்வீன்)


கட்சி தாவிய ஷாபி ரஹீம் எங்களுடன் இல்லை , ஆகையால் அவர் தொடர்பில் பேசுவதில் பிரயோசனமில்லை. இந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் முழுமையான ஆதரவினை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் சிராஸ் அஹமட்டுக்கு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முககொடுப்பது தொடர்பில் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரரையாடல்  ஞாயிற்றுக்கிழமை (07) மல்வானையில் சித்தீக் ஹாஜியாரின் வீட்டில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவித்ததாவது

தேசிய மக்கள் சக்தியுடன் நாங்கள் புரிந்துணர்வின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளோம்.எனவே கம்பஹா மாவட்டதில் அந்தக்கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ள இளம் தொழிலதிபர் சிராஸ் அஹமட்டின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் இதயசுத்தியுடன் உழைக்க வேண்டும். அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த செயற்பாட்டை மனதில் நிறுத்தி வேட்பாளர் சிராசும் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

சமகால அரசியல் களநிலவரம் சவால்மிக்கது இந்த சவாலான காலப்பகுதியில் நமது அரசியல் வியூகங்களின் மூலம் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யவேண்டிய கடப்பாடு எமது சமூகத்திற்கு இருக்கிறது. எனவே சிராஸ் போன்ற இளம் தொழிலதிபர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானதாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான இயக்கமாகும் இந்த சமூகம் பல்வேறு கட்டங்களில் முகம்கொடுத்த அனேகமான பிரச்சினைகளுக்கு நாம் முன்னின்று பொறுப்புடன் அவ்வாறான பிரச்சினைகளிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்கும் பணியினை  செய்துள்ளோம் என்றார்.

இந்த கலந்துரையாடலில் கம்பஹா மாவட்டத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேசசபை அங்கத்தவர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என மட்டுப்படுத்தப்பட்டவர்களே கலந்து கொண்டனர்.

இதன்போது கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளை  மேலும் வலுப்படுத்தவும் இம்முறை தேர்தல் விடயங்களில் திட்டமிட்டு செயற்படவும் செயலணி ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த செயலணியின் இணை இணைப்பாளர்களாக பியகம பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி ஹசன் மற்றும் அத்தனகல்ல தேர்தல் தொகுதி சார்பான கட்சியின் உயர்பீட உறுப்பினர் நாசிக் ஆகியோர் கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீமின் முன்னிலையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.


அவ்வாறே செயற்குழு உறுப்பினர்களாக அத்தனகல்ல தேர்தல் தொகுதி சார்பாக முஸ்தாக் (கஹடோவிட) இக்ராம்(உடுகொட),சப்ராஸ் (திஹாரி), இர்சான், ஜௌசி (உயர்பீட உறுப்பினர்) ஆகியோரும் தொம்பே தொகுதி சார்பாக முஹம்மது ரிழா(பூகொட),  மினுவாங்கொட தொகுதி சார்பாக ரபாய்தீன், இம்தியாஸ்,பதுர்தீன், பாரிஸ்(கோப்பியாவத்த) ஆகியோரும், பியகம தேர்தல் தொகுதி சார்பாக சித்தீக் ஹாஜியார், சாதிக் (ரக்ஷபான), பஸ்மில் (ரக்ஷபான) பாரிஸ் (வடுவகம) ஆகியோரும், களனி தொகுதியிலிருந்து பிரதேசசபை வேட்பாளர் சிபானி மற்றும் உவைஸ் ஹாஜியார், இம்டியாஸ், லியாகத், மன்சில் ஆகியோரும், மஹர தொகுதி சார்பாக ஷேக் முக்தார், அப்துர் ரஹ்மான் ஆகியோரும், வத்தளை தொகுதி சார்பாக சட்டத்தரணி நியாஸ், இக்பால் ஆகியோரும், மீரிகம தொகுதியிலிருந்து ஆதிக் மற்றும் இக்பால் ஆசிரியர் ஆகியோரும், நீர்கொழும்பு தொகுதி சார்பாக நிஷாம் கரீமும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தநிகழ்வில் பாராளுமன்ற வேட்பாளர் சிராஸ் அஹமட் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.