இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்ட 4 பேரை எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று வியாழக்கிழமை (25) உத்திரவிட்டார்.

விடயம்தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை (19) இரவு அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக அப்பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து கல்முனை மாநகர சபை சுயேட்சைக்குழு உறுப்பினர் தனது பகுதியில் பிரசாரம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளார்.

குறித்த பிரசார நடவடிக்கை முடிவுற்ற பின்னர் குறித்த சுயேட்சை உறுப்பினர் தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அவர் மீது இனந்தெரியாத சிலர் கத்தி வெட்டு தாக்குதல் ஒன்றினை அன்றிரவு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து கத்திவெட்டு தாக்குதலில் காயமடைந்தவரின் ஆதரவாளர்கள் பொதுஜன பெரமுன வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் என அடையாளப்படுத்தி அங்கு சிலரை இனங்காண முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையே  ஏற்பட்டு மோதலில்  சிலர் காயமடைந்த நிலையில் கல்முனை அஷரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாயைக்கு அனுமதிப்பதற்காக அழைத்து சென்றவரை மற்றொரு குழு வைத்தியசாலைக்குள் நுழைந்து அவரை இழுத்துச் சென்று அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிஓடியள்ளனர்.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரை கைது செய்து நேற்று வியாழக்கிழமை (25) கல்முனை  நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரை  அச்சுறுத்தும் முகமாக இனந்தெரியாத நபர்கள் அவரது வீட்டினுள் சென்று அராஜகம் செய்ததாக சிசிடிவி காணொளி கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கேசரி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.