மிலேனியம் சேலன்ச் கோர்பரேஷன் எனும் எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் முழுமையான மீளாய்வு செய்யப்பட்ட இறுதி அறிக்கையினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமித்த குழுவினர் ஒப்பந்தம் தொடர்பில் கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு துறைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்பபடையில் அறிக்கையினை தயார்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், முழுமையான அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதே வேளை MCC ஒப்பந்த மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கையை, மக்களிடம் முன்வைக்குமாறு, ஜனாதிபதி செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த அறிக்கையானது நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.