பொலிசாரினால் மேல் மாகாணத்தில் நேற்று (18) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 1,564 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 771 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் 792 பேர் துஷ்பிரயோக வழக்குகளின் சந்தேகநபர்கள் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தினுள் முகக்கவசம் அணியாமல் இருந்த 2093 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சமூக இடைவெளி பேணப்படாமை தொடர்பில் 968 பேர் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

- அததெரண -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.