பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கான மாதாந்த குத்தகை கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் ஒன்றை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதன்படி மாதாந்த குத்தகை கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பாடசாலை சேவை வேன் உரிமையாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாகவே ஜனாதிபதியின் இந்த தீர்மானம் அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.