(அஸ்ரப் ஏ சமத்)

ஜனாதிபதி தேர்தலில்  வெற்றி கொண்ட கோட்டபாய ராஜபக்ச
அவர்கள் 2025 வரைக்கும் அவரே ஜனாதிபதியாக இருக்கப்போகின்றார் இந்த்த பாராளுமன்றத் தேர்தலில் நாம்
ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனைக் கட்சிக்கு வாக்களித்து
முஸ்லிம்களாகிய நாமும் இவ் அரசில் ஒரு பங்காளிகளாகிக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை ரவுப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுத்தீனும் இனைந்து பிழையானதொரு  வழிக்குக் கொண்டு செல்கின்றனரி இதற்கு இனியும் நாம் துணைபோகக் கூடாது.

2010ல் முஸ்லிம்கள் தமிழர்கள் சிங்களவர்கள் இணைந்து மகிந்த ராஜபக்ச  அவர்களின் தலைமையிலான அரசில்  ஒற்றுமையாக வாழ்ந்தோம். இந்தத் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களை தூரமாக்கினார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணியும் அலி சப்றி உரையாற்றினார்.

நேற்று 29ஆம் திகதி தெகிவளையில் நடைபெற்ற  கூட்டத்தில் உரையாற்றும்போதே அலிசப்றி மேற்கண்டவாறு கூறினார். 25 மாவட்டங்களிலும் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதேச , நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அலி சப்றி உரையாற்றினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்
முஸ்லிம்களாகிய நாம் தொடர்ந்தும் பிழையான வழிக்குச் செல்லாது மீள சிந்தித்து செயல்படல் வேண்டும். 2015 ஐக்கிய தேசிய கட்சியின்  வலைக்குள் வீழ்ந்து றிசாத் பதியுத்தீன் மற்றும் ரவுப் ஹக்கீம் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச தலைமையில் இருந்து விலக்கி முஸ்லிம்களை தூதமாக்கினார்கள்.

இங்கு வருகை தந்துள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இணைந்து நாட்டின் சகல பிரதேசங்களுக்குசம் சென்றும் முஸ்லிம்களை எமது பக்கம் கொண்டுவருதல் வேண்டும்.
குறிப்பாக வட கிழக்கில் வாழும் முஸ்லிகளிடம் இந்த தலைவர்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளை   நம்பி ஏமாறவேண்டாம்.  நமது மக்களை மீண்டுமொரு படுபாதை குழிக்குள் கொண்டு சென்றுவிட்டார்கள்.

நமது மக்களை எமது ஜனாதிபதி, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர்கள் தலைமைத்துவத்தின் கீழ் கொண்டுவாருங்கள்.இந்த பொதுஜன பெரமுன அரசு  இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆசனங்களை பெறுவது உறுதியாகிவிட்டது. ஆகவே தான் நாமும் அதில் பங்களாகிக் கொள்ளுதல் வேண்டும்.

இங்கு வருகை தந்துள்ள மக்கள் பிரதி நிதிகள் தமது பிரதேசத்தில் பல்வேறு பிர்ச்சினைகள் உள்ளதை இங்கு சுட்டிக்காட்டினார்கள்.இங்கு நாம் இந்தத் தேர்தலில் எவ்வாறு இந்த அரசுக்கும் பங்களிப்பது என்றுதான் ஆராய்வதற்கு ஒன்று கூடினோம்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் இவ்வாறு ஒரு கூட்டம் நடைபெற 24 மணித்தியாலத்திற்கு முன்பு தொலைபேசி மூலமே வேண்டுகோள் விடுத்தேன்  அவர் உடன் கட்டாயம் வருகிறேன் என சொல்லி இவ்விடத்தில் வருதை தந்துள்ளார்கள்.இவ்வாறான தலைவர்களுடனேயே நாம் இணைந்து விருப்பமாக அரசியல் செய்கின்றோம்.

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை 24 மணித்தியாலயங்களுக்குள்  சொப்பிங் பேக்குடன் அன்று விடுதலைப்புலிகள் துரத்தினார்கள்.  மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான அரசு  உலக நாடுகளில் யுத்தத்தினால் வெல்ல முடியாத ஒரு யுத்தத்தினை வென்றெடுத்தார்கள்.இந்த நாட்டினை மீண்டும் ஜக்கியத்தினை சமாதானத்தினை ஏற்படுத்தினார்கள்.

முஸ்லிம்களாகிய நாம் யாழ்ப்பாணம், மன்னார். கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற  சகல பிரதேசங்களுக்கு சென்று நமக்குச் சொந்தமான காணி நிலங்கள் வீடுகளுக்கும்  சென்று வருகினறோம். அதே போன்றுதான் ஆயிரக்கணக்கான காணிகளில் மீளவும் எமது விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.அன்று விடுதலைப்புலிகள் வட கிழக்கில் யுத்தம் செய்தபோது    அவர்களது தனியான பொலிஸ் நிலையம், , நீதிமன்றம், நிர்வாகம், என  இருந்து வந்தது.

அதற்குள் முஸ்லிம்கள் சிக்கித் தவித்தார்கள். அவர்களது காணி நிலங்களுக்கு போகமுடியாத சுழ்நிலை இருந்தது.

வியாபாரம் செய்ய முடியாமல் இருந்தது. இதனால்  பல துண்பங்களை முஸ்லிம்கள் அனுபவித்தார்கள். யுத்தம் முடிவடைந்த பினனர் தான் நாம் சமதானக் காற்றினை சுவாசிக்கின்றோம். அதற்காவது நாம் நன்றிக் கடமையுள்ளவா்களாக இருத்தல் வேண்டும்.

2012ல் நடைபெற்ற ஜக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு அரபு நாடுகள் பல உதவின. குறிப்பாக சவுதி , பாக்கிஸ்தான் தூதுவர்கள் முன்நின்று இலங்கை அரசுக்கு சார்பாக வாக்கு அளித்தார்கள்.
அந் நேரத்தல் நானும் அவ்விடத்தில்  சென்று அவதானித்தேன்.அதன் பிறகு முஸ்லிம்களை வேறாக்குவதற்கு பல தீய சக்திகள்  திட்டம் தீட்டினார்கள் அதற்குள் நாம் அகப்பட்டோம்.

அன்மையில் நான் கிழக்கு மாகாணத்த்திறகுச் சென்றிருந்தேன்.அங்குள்ள பள்ளிவாசல் தலைவர்கள் ,பெற்றோர்கள்.  எமது பிள்ளைகளை போதைவஸ்து, ஜஸ் போதை வற்றில் இருந்து பாதுகாத்துத் த ாருங்கள் எனக் கூறினார்கள். இதனை  இந்த நாட்டில் இருந்து அகற்றுவதற்கு ஜனதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் எடுத்துக் கூறுங்கள் எனச் சொன்னார்கள்.

சிங்கள, தமிழ் முஸ்லிம் பிள்ளைகள் யாராக இருந்தாலும் இநத் போதையில் இருந்து விடுபடுவதற்கு அதற்கான நடவடிக்கைகளையும் ஜனாதிபதி துரிதமாக எடுத்து வருவதை நீங்கள் காணக்கூடியதாக உள்ளது. உலகில் எந்தத் தலைவர்கள் முன்னெடுக்காத வகையில் அவர் கோரோனா தொற்று நோய்யினால் முன் எடுத்த நடவடிக்கையை பாராட்டுகின்றனர்.

பேருவளையில் கூட  லொக்டவுன் செய்யும் போது வித்தியமான கோணத்தில்  அதனை கதைத்தவர்கள் தற்பொழுது இந்த ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுளை கொடுத்தல் வேண்டும் துஆக் கேட்கின்றனர்.

காரணம் பேருவைளக்குள் தொற்றுக்குள்ள வானவர்கள் அகற்றி  கொரோணா நிலையத்தில் 200 பேரை கொண்டு வைத்து அவர்களுக்கு எவ்வித குறையுமின்றி நோன்பு பிடிப்பதற்கு அதனை திறப்பதற்கு அவர்களின் ஜக்கடமைகளை செய்வதற்கு இராணுவம் உதவி எமது பேருவுளை பிரதேசத்தில் கூடுதலாக பரவாமல் தடுத்ததை அவர் மிக நுண்னியமாக அதனை அமுல்படுத்தியதை மெச்சுகின்றனார்.

இந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால் பள்ளிவாசல்கள் உடைத்துவிடுவார்கள் பெண்கள் பர்தா அணிய விடமாட்டாட்டார்கள் எனச் சொன்னார்கள். கடந்த 8 மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஏதாவது அநீதி நடைபெற்றுள்ளதா? என அலி சப்றி கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.