முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகியிருந்தார்.

அவரை இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு ரிஷாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரிவில் இன்று ஆயாராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.

அதற்கமைய இன்றயதினம் காலை 10 மணிக்கு ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் ஆஜராகியிருந்தார்.

ரிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவரது வெற்றியை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர் தலைமையிலான கட்சியின் பாராளுமன்ற ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறன திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதாக கட்சி முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

-வவுனியா தீபன்-
மேலும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.