அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நேற்று கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பெண்கள் உட்பட 14 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடையில் நேற்று (16) பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

அண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் இருவர் நேற்று காலை 5 மணி அளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நேற்று கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்ட 9 பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Adaderana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.