கந்தகாடு கொவிட் 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளிகளில் இரு தரப்பினர்களுக்கு இடையில் நேற்று (21) மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது, 05 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த போது கொரோனா தொற்றுக்குள்ளான தரப்பினர்களுக்கு இடையில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மோதலை இராணுவத்தினர் கட்டுப்படுத்தியுள்ள நிலையில் காயமடைந்தவர்கள் இராணுவத்தினரால் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் கந்தகாடு கொவிட் 19 சிகிச்சை நிலையத்தின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரசிங்க தெரிவித்தார்.

கந்தகாடு கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையத்தில் சுமார் 370 கொரோனா தொற்றாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.