அரிசி அல்லது நெல்லை, விலங்கு உணவாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் இது தொடர்பில் அதி விசேட வர்தமானி (2185/67) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்றும் அரிசியை விலங்கு உணவு உற்பத்தி தயாரிப்புக்கு நேரடியாகவோ அல்லது அதன் உள்ளீடாகவோ பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படுவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அவ்வாறான தேவைக்காக விற்பனை செய்தல், காட்சிப்படுத்தல், விற்பனைக்காக கோருதல், களஞ்சியப்படுத்துதல், போக்குவரத்து செய்தல், விநியோகித்தல், வாங்குதல் அல்லது கொள்வனவு செய்ய முடியாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.