எதிர்வரும் பொதுத்தேர்தல் வாக்களிப்பு  நடவடிக்கைகளுக்காக  தங்களது வசிப்பிடம் நோக்கி பயணிக்கும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்ட பொதுமக்கள் பயணிப்பதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை ஓகஸ்ட் மாதம்  3 ஆம் திகதி பௌர்ணமி விடுமுறை தினம் ஆகையினால்  அரச மற்றும் தனியார் துறையினரின் ஜூலை மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மேலதிகமாக 600 தனியார் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் ரயில்சேவைகளை விரிவுபடுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மேலதிகமாக ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவதற்கு தீர்மானத்துள்ளதாகவும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.