கம்பஹா மாவட்டத்தில் இரு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமிந்த சமரதிவாகர தெரிவித்தார்.

இவ்வாறு தொற்றுக்குள்ளான இருவரில் ஒருவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த வளவாளர் மற்றும் அடுத்தவர் அவரது சாரதி என்று தெரிய வருகிறது.

சாரதி என அறியப்படும் கம்பஹா, டிகிரிராஜ மாவத்தையை சேர்ந்த தொற்றாளர் கடந்த 07 ஆம் திகதி கம்பஹா நீதிமன்றத்திற்கு சென்று வந்துள்ளார்.

மேலும் அதனைத் தொடர்ந்து மனைவியுடன் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கும் சென்று வந்துள்ளதுடன், மரண நிகழ்வொன்றில் கலந்து கொண்டதாகவும் தெரியவருகிறது.

மேலும் அடுத்த கொரோனா தொற்றாளரான குறித்த வளவாளர் கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

குறித்த இருவரையும் அவர்களது வீடுகளில் வைத்து PCR பரிசோதனை செய்த போது இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.