நிட்டம்புவ நகரில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற போலி வைத்தியர் ஒருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.

நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேகநபர், போலி வைத்தியர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த நிலையத்திலிருந்து கருக்கலைப்பிற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள், வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபரை இன்று (31) அத்தனகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இச்சந்தேகநபரிடம் விரிவான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.