ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான தேர்தல் பிரச்சார கூட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசிர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த அனைத்து தேர்தல் பிரச்சார கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இம்முறை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ள பிரச்சார கூட்டங்களை மட்டுப்படுத்துமாறும் அவ்வாறு பிரச்சார கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.