இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ந் திகதிகளில் மான்செஸ்டரில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்ட பிறகு சர்ப்ராஸ் அகமது முதல்முறையாக 20 ஓவர் அணியில் இடம் பிடித்துள்ளார். முகமது ஹபீஸ், சொயிப் மலிக் ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர். துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத்துக்கு அணியில் இடம் கிட்டவில்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:-

பாபர் அசாம் (தலைவர்), பகார் சமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகர் அகமது, இமாத் வசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது அமிர், நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது, ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, சொயிப் மலிக், வஹாப் ரியாஸ்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.