கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 250 பேர், இன்றைய தினம் (24) நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் அனைவரும் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து 21 பேரும், பஹ்ரேனில் இருந்து 180 பேர் மற்றும் இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து 49 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.