பொதுத் தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி நாடு பூராவும் உள்ள 77 நிலையங்களில் இன்று காலை 7க்கும் 8 மணிக்கும் இடையில் மணிக்கு ஆரம்பமாகிறது.
முதலாவதாக தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். பிற்பகல் 3மணி அளவில் முதலாவது பெறுபேற்றை வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார். இறுதி பெறுபேற்றை இன்று (06) நள்ளிரவு அளவில் வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது.
விருப்பு வாக்குகள் நாளை காலை 8 மணி தொடக்கம் எண்ணப்படவுள்ளன. நாளை நள்ளிரவு அளவில் விருப்பு வாக்கு பெறுபேறுகளை வெளியிடுவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் நோக்கமாகும். ஒட்டுமொத்தப் பெறுபேறுகளையும் சனிக்கிழமை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியல் கட்சிகள் சனிக்கிழமை தேசிய பட்டியல் அங்கத்தவர்களின் பெயர் விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கவுள்ளன. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
இதேவேளை தேர்தல் பெறுபெறுகளை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவியுடன் உடனுக்குடன் வழங்குவதற்கு எமது siyanenews.com தயாராக இருக்கிறது என்பதனைை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.