பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்களுக்கு எதிராக பொலிஸாரினால் நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது.

அதன்படி, துறைமுக பிரவேச வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகளில் நுழைவதை தவிர்த்து குறித்த நீதிமன்றினால் உத்தரவொன்று வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தினுள் கொள்கலன் லொறிகள் பிரவேசத்திற்கு ´ஹர்தால் பாலம்´ அருகில் போடப்பட்டுள்ள தடையை நீக்குமாறு மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று மதியம் இலங்கை துறைமுக தலைவரின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

எனினும், அது வெற்றியளிக்கவில்லை. பின்னர், இது தொடர்பில் பொலிஸார் இன்று பிற்பகல் நீதிமன்ற உத்தரவொன்றை பெற்ற நிலையில் அதனை எதிர்ப்பாளர்களுக்கு அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

(Adaderana)
Blogger இயக்குவது.