இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்படும் வரியை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துளளள்ளது.

நேற்று முன்தினம் (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெரிய வெங்காயத்திறகான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை 15 ரூபாவில் இருந்து 50 ரூபா வரை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவு அதிகரித்துள்ளதாலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.