தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான மர்ஜான் பளீல் மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை, கெச்சிமலை தர்கா ஷெரீபின் செய்கு நாயகம் சங்கைக்குரிய காலிப் அலவி ஹாஜியார் பின் அஷ்ஷெய்க் அப்துல்லா ஹாஜியார் அலவியதுல் காதிரியை சந்தித்தனர்.

நேற்றையதினம் (14) மக்கொனை இந்திரிலிகொடையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், மர்ஜான் பளீல் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பிலும், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தினகரன்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.