சகல பிரச்சினைகளுக்கும் சுபீட்சத்தின் இலக்கு என்ற கொள்கைப் பிரகடனத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்..

செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகும் 2020ஆம் நிதியாண்டின் சேவைக்கான இடைக்கால கணக்கறிக்கை Vote on Account யை இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்து உரையாற்றினார்.

தற்போதைய அரசாங்கம் இறக்குமதியை வரையறுத்து, வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அநாவசிய முறையில் அதிகரிப்பதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய 900 கோடி ரூபா கடன் பற்றி மீளாய்வு செய்யப்படவுள்ளது. செலுத்தப்படாத கட்டணப் பட்டியல்களை செலுத்துவதற்காக குறைநிரப்புப் பிரேரணையின் மூலம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் வெளிநாட்டு ஒதுக்கத்தில் பாரிய அளவிலான தொகையை அத்தியாவசியம் அற்ற இறக்குமதிக்காக செலவிட்டுள்ளது.; என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நிர்மாணத்துறை சார்ந்தவர்களுக்கு உரிய கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் உரிய தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். இது 24 ஆயிரத்து 200 கோடி ரூபாவாகும். மொத்த தேசிய உற்பத்தியில் இது 2.3 சதவீதமாகும். கடந்த அரசாங்கம் தோல்வி அடையும் போது, அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சி வேகம் இரண்டு சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருந்தது. இதனால், உள்நாட்டு தொழிலாளர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.