சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் தேவைப்படுவதாக பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மக்களின் ஜனநாயக உரிமையை சரியாக பயன்படுத்த வேண்டுமானால் அனைத்து கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும். அதனால் இதற்கு பங்களிப்பு வழங்குவது அனைவரிதும் பொறுப்பாகும் என அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். பிரச்சார ஓய்வு காலப்பகுதியில் வேட்பாளர்களை விளப்பரப்படுத்தும் செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் தினத்தன்று சுமூகமாக நடந்து கொள்வதும் அவசியமாகும். சமூக ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் தேர்தல் சட்ட மீறல்களிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறும் திரு.ரோஹன ஹெட்டியாராச்சி சம்மந்தப்பட்ட தரப்புக்களை கேட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.