தமிழ் பேசும் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பொதுக் கூட்டமைப்பொன்றில் தனித்து போட்டியிட்டால் மாத்திரமே கம்பஹா மாவட்ட தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்ள முடியும் - UPC யின் பொதுச் செயலாளர் நாஸர் J.P.

 மிக விரைவில் நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில் 77000 முஸ்லிம் வாக்காளர்களையும் 45000 தமிழ் வாக்காளர்களையும்  கொண்ட கம்பஹா மாவட்டத்தின் தமிழ் பேசும் சமூகத்தின் சார்பாக மாகாண சபை பிரதிநிதித்துவத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையிலான பொதுக்கூட்டணி ஒன்றின் மூலம் போட்டியிட்டே பெற்றுக்கொள்ள  முடியும் என்று ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் J.P. தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில்  மாறாக பெரும்பான்மை கட்சிகளினுடாக தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது என்பது வெறும் பகற்கனவே ஆகும். கடைசியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத்தேர்தல் முடிவுகளின்படி கம்பஹா மாவட்டத்தில் ஒரு ஆசனத்தினை பெற்றுக்கொள்வதற்கு 25000 வாக்குகளை ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும். 

அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 17294  வாக்குகளை பெற்று   Balance votes முறையில் ஒரு ஆசனத்தினை பெற்றுக்கொண்டதுஅதே போன்று மனோ கணேசன் அவர்களின் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி தற்போதைய  வத்தளை நகர சபை உறுப்பினர் எஸ்.சசிகுமார் அவர்களின் தலைமையில் போட்டியிட்டு 6844 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஆசனங்களை பெற்றுக்கொள்ளவில்லை.

 ஆகவே நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி ஒன்றிணை உருவாக்குவதற்கு மேற்படி கட்சிகளின் கம்பஹா மாவட்ட மத்திய செயற்குழுக்கள் மேற்படி கட்சிகளின் தலைவர்களான ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், ரிஷாட் பதியுத்தீன் ஆகியோரின் கவனத்திற்கு மிக விரைவில் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.