(நா.தனுஜா)

மஹிந்த ராஜபக்ஷ 1978 ஆம் ஆண்டில் எதிர்ப்பை வெளியிட்ட ஜே.ஆர்.ஜெயவர்தனவின் விரும்பத்தகாத கூறுகளைக்கொண்ட வலுவான நிறைவேற்றதிகாரப் பதவி, தற்போது கோத்தபாய ராஜபக்ஷவினால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் என்ற பெயரில் மீள அறிமுகம் செய்யப்படுகின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் தெரிவித்திருக்கிறார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழங்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.