க.பிரசன்னா, ரிஹ்மி ஹக்கீம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்த 10 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இன்னும் வழங்கப்படாமையினால் வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து நேற்று புதன்கிழமை காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி காரியாலயம் வரையிலும் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.

 "மார்ச்சில் Select, இன்று Reject", "ஒரே நாடு, இரு சட்டங்கள்", "வாக்குறுதியளித்தபடி 10,000 தொழில்களை வழங்கு" போன்ற பல கோசங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்திய வண்ணம் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதல்களுக்கமைவாக 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் நிகழ்வு கடந்த செப்டெம்பர் 02 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

50 ஆயிரம் தொழில் வாய்ப்புகளுக்காக கோரப்பட்ட விண்ணப்பங்களில் பல ஊ.சே.நி மற்றும் ஊ.ந.நி அங்கத்தவராக இருத்தல் மற்றும் தொழிலில் ஈடுபடல் போன்ற காரணங்களினால் நிராகரிக்கப்பட்டிருந்தன.



நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதேவேளை 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மேன்முறையீடுகளை பிரதேச செயலகத்தின் ஊடாக மாவட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க கூறப்பட்டது. ஆனால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் இன்னும் பரிசீலிக்கப்படாமல் இருப்பதாகவும் உடனடியாக 10 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறும் கூறியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கையளிக்கப்படவில்லையென பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை மறுத்திருந்தனர். அதேவேளை ஜனாதிபதி காரியாலயத்துடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தி தருமாறும் கோரியிருந்தனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.