ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் (22) உரையாற்ற ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் அவருக்கான கமெரா நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து எதிரணியினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

20ஆவது திருத்தம் கொண்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே அரசாங்கம் சர்வாதிகாரமாக செயற்படுவதாக எதிரணியினர் குற்றம் சுமத்தினர்.

தனது நாடாளுமன்ற வரப்பிரசாதம் மீறப்பட்டுள்ளதாக  கபீர் ஹாசிம் கடும் தொனியில் கூறினார்.

எனினும் அவருக்கான கெமரா வழங்கப்படாத நிலையில் மன்றில் கடும் அமளி துமளி ஏற்பட்ட நிலையில் பின்னர் அவர் உரையாற்றும் பகுதியில் இருந்த கெமரா செயற்படுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.