புத்தளம் கல்வி வலயத்தின் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஜலீலின் நிதியுதவியில் கஹட்டோவிட்ட பத்ரியாவில் நிர்மாணக்கப்பட்ட குடிநீர் வழங்கல் கட்டமைப்பு மற்றும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைகளை மாணவர்களின் பாவனைக்காக வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (28) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை சமாதான நீதவான் அல்ஹாஜ் பிர்தவ்ஸின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் அதிபர் அஸாம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்‌ஷ அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும், விசேட அதிதிகளாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட், புத்தளம் கல்வி வலயத்தின் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஜலீல், நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி .. , அல்ஹிமா சமூக சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் நூருல்லாஹ், கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலய அதிபர் சர்ஜூன் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன்புரி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் நிகழ்வில், கஹட்டோவிட்ட JF விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் சார்பாக பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கான மின் விசிறிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், பாடசாலையின் கால்பந்தாட்டஅணிக்கான உத்தியோகபூர்வ சீருடைகளை கஹட்டோவிட்ட கால்பந்தாட்ட ப்ரீமியர் லீக் கமிட்டி சார்பாக உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP அவர்களினால் பாடசாலைக்கு புல்வெட்டுதல் மற்றும் தொடர்புடைய வேலைகளுக்குத் தேவையான இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















கருத்துரையிடுக

Blogger இயக்குவது.