அநுராதபுரம் - மதவாச்சி பிரதேச பாடசாலையொன்றில் தரம் 11 இல் பயிலும் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விகாரையொன்றில் நடைபெறும் மேலதிக வகுப்புகளுக்காக வருகை தந்த மாணவிகள் தண்ணீர் போத்தலில் பியர் வகை மதுபானத்தை எடுத்து வந்து அருந்தியுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த மாணவிகள் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

மேற்படி மாணவிகள் நீண்டகாலமாக மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்களுக்கு வாகனமொன்றில் வந்து மதுபானத்தை வழங்கி விட்டு சென்ற நபரை பொலிஸார் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.