மேல் மாகாணத்தில் ஆசிரியர் தகுதிக்கான பயிற்சிகளை முடித்துள்ள உதவி ஆசிரியர்களை, ஆசிரியர் தரம் 3.1இல் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக, பெருந்தோட்ட அபிவிருத்திக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானிடம் மேல் மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்.  

மேல் மாகாணத்தில் ஆசிரியர் தகுதிக்கான பயிற்சி நெறிகளை முடித்து, நீண்டகாலம் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாது நிர்க்கதியாகியுள்ள 50 பேர் வரையான உதவி ஆசிரியர்கள், தமது நிலைமை குறித்து செந்தில் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இதனையடுத்து உடனடியாக மேல் மாகாண ஆளுநருடன் இந்த விவகாரம் குறித்து நேரடி பேச்சுவார்த்தையொன்றை செந்தில் தொண்டமான், உரிய பிரதிநிதிகளுடன் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடத்தியிருந்தார்.  

இதன்போது, உதவி ஆசிர்களின் எதிர்கொண்டுள்ள இந்த நிலைமை, இவர்கள் உதவியாசிரியர்களாக உங்வாங்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான சிக்கல்களை ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.

ஆசிரியர்களின் நிலைமைகளை உணர்ந்துகொண்ட ஆளுநர், ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான தகுதிகளை இவர்கள் பூர்த்திசெய்துள்ள போதிலும் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்பட வேண்டும் என்பதுடன், அரசாங்கம் தீர்மானித்தால்தான் இவர்களை உள்வாங்க முடியும்.

என்றாலும், இவர்களின் நிலைமை கருத்திற்கொண்டு அடுத்தவரும் உள்வாங்கள்களில் இவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கையெடுப்பதாக மேல்மாகாண ஆளுநர், செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.

(தமிழ் மிரர்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.