(அஷ்ரப் ஏ சமத்)

பிரபல சினிமா இயக்குனரான மணிரத்னமின் தமிழ் திரைப்படமான ”பொன்னியன் செல்வன்" திரைப்படத்தினை இலங்கையில் 100 நாட்கள் தங்கி  நின்று தயாரிப்பதற்காக  ஒக்டோபரில்  500 பேர் அடங்கிய நடிகர்குழு, இலங்கை வரவுள்ளது.

  ஏற்கனவே தாய்லாந்தில் 30 வீதமான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பண்டைய மிகிந்து மன்னன் கதை பற்றியது. தம்புள்ளை  அரச ரண்மித்தென்ன சினிமா கிராமத்திலும் மேலும் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்புக்கள் நடைபெறவுள்ளன. இதற்காக இலங்கையில் பிரசன்ன விதானகே  மற்றும் ரவீந்திர ரந்தெனிய ஆகியோா்கள் சென்னையில்  ஒப்பந்தத்தில்  கைச்சாத்திட்டு்ளளனா். இலங்கையில் உள்ளுர் கலைஞா்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.  இதற்காக 1000 இலங்கையா்களுக்கு படப்பிடிப்புக்களில் உதவியாளா்களாக வாய்ப்பு கிடைக்கவுள்ளது.  

 ஐஸ்வர்யா ராய், சீயான் விக்ரம், கார்த்திக், த்ரிஷா,  பிரபு, ஜெயம் ரவி, ஜெயராம்,  விக்ரம் பிரபு, சரத்குமாா், சிலாகுமாா், அஸ்வின், றியாஸ்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஆகியோா்  இலங்கை வரவுள்ளனா். இதற்காக இலங்கை அரசு அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.