மரண தண்டனை கைதிக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்துள்ளனர்.

 இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய அமர்விலிருந்து வௌிநடப்பு செய்துள்ளனர்.

பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.