சில்மியா யூசுப்

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (SLIATE) பயின்ற ஆங்கில உயர் டிப்ளோமா தாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளக் கோரிக்கை விடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான மகரூப் 

HNDE ஆங்கில உயர் டிப்ளோமாதாரிகளை  ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள ஆவனம்் செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் வேண்டிக் கொண்டார்.  

செயலாளர் ஐ கே ஜி முத்துபன்டாவை அண்மையில்  சந்தித்து திருகோணமலை மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

டிப்ளோமாதாரிகளுக்கான நியமனம் நீண்டகாலமாக வழங்கப் படாமை இருப்பதனால் ஆங்கில உயர் டிப்ளோமா சான்றிதழ் பெற்றோர் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து நீண்ட காலமாக கிடைக்காமல் இருக்கும்  தமக்கான நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையை கல்வி அமைச்சின் செயலாளரிடம் முன் வைத்தார்,
அத்தோடு இது குறித்து தான் நடவடிக்கை எடுப்பதாக இதன் போது கல்வி அமைச்சின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினரிடம் உறுதி அளித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.