உயர் தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி சடலமாக மீட்பு!

Rihmy Hakeem
By -
0

 

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த உயர்தர மாணவியொருவர், அவரது வீட்டில் இருந்து இன்று (24) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (23) இரவு, தனது படுக்கை அறைக்கு நித்திரைக்குச் சென்ற இம்மாணவி, நேற்றுக் காலை உரிய நேரத்துக்குள் எழுந்து வராமையால், வீட்டார் சென்று பார்த்த போது, அவர் மரணித்த நிலையில் மீட்டப்பட்டுள்ளார்.

கிண்ணியா முஸ்லிம் மகளிர்  மகா வித்தியாலயத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற இம்மாணவி, கடந்த வருடம்  பரீட்சைக்குத் தோற்றியதோடு, இந்த வருடம் இரண்டாவது தடவையாவும்  பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளார்.

மேற்படி சம்வம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)