Old Picture

தீ விபத்திற்கு உள்ளான Mt New Diamond கப்பலின் எரிபொருள் மாதிரி இன்று (15) அரசாங்க இரசாயன ஆய்வு பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி தர்ணி பிரதீப்குமார இதற்கு முன்னர் நாம் குறிப்பிட்ட கப்பலுக்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டோம்.

தற்பொழுது நாம் சம்பந்தப்பட்ட கப்பலுக்குள் சென்று பிரவேசித்து கப்பலின் பல்வேறு இடங்களில் எரிபொருள் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டோம் என்று தெரிவித்தார்.

இதேவேளை தீ பற்றிய கப்பல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.

குறிப்பிட்ட கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதா? இல்லையாயின் கப்பலை இலங்கைக்கு அப்பால் அனுப்புவதா? இதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் என்ன? என்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டப்பணம் விதித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நாடு என்ற ரீதியில் மேற்கொள்ளக்கூடிய சிறந்த தீர்மனத்தை மேற்கொள்வதற்கு தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

- அரசாங்க தகவல் திணைக்களம் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.