மினுவாங்கொடைவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் 69 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் 39 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் (04) வெளிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டதுடன், முதற் கட்டமாக 150 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந் நிலையில் இன்று காலை வெளியானது. அவர்களது பி.சி.ஆர். முடிவிகளிலேயே 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.