பரீட்சை முடிந்து பிள்ளை வீடு வந்ததும்…

அன்பின் பொற்றார்களே?

பல சங்கடங்களை, சவால்களை சந்தித்து பரீட்சைக்கு முகம்கொடுத்துவிட்டு எமது பிள்ளை இன்னும் சற்றுநேரத்தில் வீட்டுக்கு வரலாம் அல்லது வந்திருக்கலாம். 

முதலில் பிள்ளையை சிரித்த முகத்துடன் வரவேற்போம்

பிள்ளை ஒரு பெரிய முயற்சிக்கு முகங்கொடுத்த மகிழ்ச்சியை கண்டு எமது முகபாவனையால், வார்த்தைகளால் பிள்ளையை ஊக்கப்படுத்துவோம் 

பிள்ளையுடன் பேசும் போது அவசரப்படாமல் அமைதியாக பேசுவோம்

பிள்ளைக்கும் பேசுவதற்கு இடம் கொடுப்போம்

பரிட்சையை சரியாக செய்தாயா? எல்லா வினாக்களுக்கும் பதில் கொடுத்தாயா? எதாவது பிழைகள் விட்டாயா? எத்தனை மதிப்பெண்கள் எடுக்கலாம்? மற்றப்பிள்ளைகள் எப்படி செய்தார்கள்? போன்றவாறு கேள்விகளை கேட்காதிருப்போம். இப்படி கேட்பது பிள்ளையை மனஉழைச்சலை ஏற்படுத்தலாம் 

பிள்ளைக்கு ஏதாவது வெகுமதி கொடுப்போம். சிறிய பரிசை வழங்கி, ஒரு உணவை சமைத்துக் கொடுத்து, பிரார்த்தனை செய்து வெகுமதியளிக்கலாம். வெகுமதி பிள்ளைக்கு வலுவூட்டலாக அமையும். 

உங்களால் முடிந்தவாறு முறையாக செய்திருப்பீர்கள். நல்லதொரு முடிவு உங்களுக்குகிடைக்கும். நான் உங்கள் முயற்சியைப் பார்த்து சந்தோஷப்படுகிறோம். என்று பிள்ளையை பார்த்து கூறுவோம் 

பிள்ளை பரீட்சை பற்றி ஏதும் கதைக்க ஆசைப்பட்டால் அதற்கு அனுமதி கொடுப்போம். பிள்ளை சொல்வதை மௌனமாக செவிமடுப்போம். பிள்ளை ஏதேனும் தவறுகள் விட்டதாகச் சொன்னால் அது பற்றி இன்னும் கேட்டுத் தெரியாமல் அவற்றில் தொடர்ந்து தங்கியிருக்கத் தேவையில்லை என்பதை பிள்ளைக்கு மெதுவாக உணர்த்தி விடுவோம் 

பிள்ளை பரீட்சையை எழுதிவிட்டான் என்பற்காகவன்றி எமது பிள்ளை எமது மகன் அல்லது மகள் என்பதாலும் உயர்வான ஒரு மனிதன் என்பதாலும் அவனை, அவளை நேசிப்பதாகவும் மதிப்பதாகவும் உணரச்செய்வோம். 

எமது அன்பும் ஆதரவும் எப்போதும் பிள்ளைக்கு இருக்கிறது என்பதை பிள்ளைக்கு நினைவூட்டுவோம். 

மதிப்பெண்களுக்கு முதலிடம் கொடுப்பதைவிட பிள்ளையின் கடின உழைப்பையும் முயற்சியையும் பாராட்டுவோம்

பிள்ளையின் எதிர்காலம் குறிப்பிட்ட பரீட்சையில் தங்கியில்லை என்பதை பிள்ளைக்கு நினைவூட்டுவோம் 

“பரீட்சைகள் வாழ்க்கைக்கானவை. ஆனால் வாழ்க்கை பரீட்சைக்கானது அல்ல” என்பதை நாம் உறுதியாக நினைவிற்கொள்வதுடன் எமது பிள்ளையின் மனம் தைரியம் அடைய அருள் இறைவனைப் பிரார்த்திப்போம். 

---------------

அஸ்ஹர் அன்ஸார் 

மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.