அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச தபால் தினத்திற்கு அமைவாக தபால் வார நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

More than post என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் தேசிய இலத்திரனியல் (மின்னணுவியல்) முகாமைத்துவ வாரத்தை இலங்கை மத்திய சுற்றாடல் சபையும் இலங்கை தபால் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. இந்த வார காலப்பகுதியில் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் வீடுகளில் உள்ள இலத்திரனியல் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் தபால்மா அதிபர் இதனை கூறினார்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , வீடுகளில் சேரும் இலத்திரனியல் கழிவுப்பொருட்களை தபால் வாரம் இடம் பெறும் காலப்பகுதியில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 வரையில் பொது மக்கள் தபால் அலுவலக வளவுக்கு அவற்றை கொண்டு வந்து வழங்க முடியும். இவ்வாறு கொண்டு வரப்படும் கழிவுப்பொருட்களை வைத்திருப்பதற்கு தபால் அலுவலக வளாகத்தில் இடவசதி இல்லையாயின் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சிமன்ற நிறுவனங்கள் அல்லது பிரதேச செயலகங்களுடன் இணைந்து அதற்கான இடத்தை தயார் செய்யுமாறு அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் தான் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்ததார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.