gazette quarantine


புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் சுகாதாரப் பாதுகாப்பு சட்டத்தை மீறுவோருக்கு 10,000 ரூபாவுக்கு மேற்படாத தண்டமும், 6 மாத கால சிறைத்தண்டனையும் அல்லது இதில் ஏதாவது ஒரு தண்டனையும் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர விற்பனை நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு பிரவேசித்தல் மற்றும் அவற்றை வழிநடத்திச் செல்லுதல் தொடர்பிலும் இந்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சேவை நிலையங்கள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு பிரவேசிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

இருவருக்கு இடையில் ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.

சேவை நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு முன்னர் அனைவரினதும் உடல் வெப்பநிலை கணிப்பிடப்பட வேண்டும். கிருமி அழிப்பு திரவத்தைக் கொண்டு இரு கைகளையும் கழுவுவதற்கான வசதி செய்யப்பட வேண்டும்.

சேவை நிலையங்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் செல்லும் அனைவரினதும் பெயர், அடையாள அட்டை, மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய தகவல் அடங்கிய விபரத்தை உள்ளடக்கிய ஒரு ஆவணத்தை பேண வேண்டியதும் அவசியமாகும்.

சேவை நிலையங்களில் உயர்ந்த பட்ச அளவையும்விட பணியாளர்களையும் ஏனையவர்களையும் வைத்திருக்கக்கூடாது. அதேபோல், பயண வரையறை, தொற்றொதுக்கல் நடவடிக்கை, போக்குவரத்து நடவடிக்கைகள் போன்ற விசேட விடயங்கள் தொடர்பான சட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி - http://www.documents.gov.lk/files/egz/2020/10/2197-25_T.pdf

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.