பாராளுமன்ற அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது

இந்த அமர்வு நாளை (6) தொடக்கம் 9 ஆம் திகதி விரையில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழுவில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ஷ, டளஸ் அளகப்பெரும, மஹிந்த அமரவீர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மனத்திற்கு அமைவாக நிதி திருத்த சட்ட மூலத்தின் 2 ஆம் வாசிப்பு மற்றும் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் தொடர்பிலான விவாதம் நாளை இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் ஆளுங்கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் மாலை 4.30 தொடக்கம் 5.30 வரையில் இடம்பெறும்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.