அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை பிடியாணை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் குறிப்பிட்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாரிற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இருப்பினும் பிடியாணை இல்லாமல் ரிஷாட் பதியுதீனை பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என நீதிபதி தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபர் அலுவகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.