ஆணமடுவ, தென்னன்குரியாவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவன் மூன்றாவது முறையாகவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.பரீட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய குறித்த இளைஞன் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

பின்னர் பூரண குணமடைந்த குறித்த நபர் ஆணமடுவ, தென்னன்குரியாவ பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி சுகயீனமுற்று சிலாபம் வைத்தியசாலையின் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது அவர் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.

பின்னர் குறித்த இளைஞன் இரணவில வைத்திசாலையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதனயைடுத்து வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த குறித்த இளைஞன் மீண்டும் சுகயீனமுற்ற நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது அவர் மூன்றாவது முறையாகவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.

அததெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.