நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 194 கொரோனா தொற்றாளர்களில் 80 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தும் ஏனைய 114 பேரும் எவ்வித தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இனங்காணப்பட்டவர்களுள் கம்பஹா பகுதியை சேர்ந்த 36 பேர், மினுவங்கொட பகுதியை சேர்ந்த 38 பேர், திவுலபிட்டியவை சேர்ந்த 34 பேர் மற்றும் சீதுவ பகுதியை சேர்ந்த ஒரே விடுதியில் தங்கியிருந்த 42 பேர் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பில் 7 பேர் மற்றும் கிரிந்திவெலயில் 4 பேர் என நாட்டின் மேலும் பல பகுதிகளில் இருந்து இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டின் ஏதாவது பகுதியில் இருந்து ஒருவர் இனங்காணப்பட்டால் அவரில் இருந்து மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.