என்.ராஜ்

நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் தலையெடுத்துள்ளமையால், பொதுப் பரீட்சைகளைப் பிற்போடுமாறு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சுக்கு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

நாட்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக உருவெடுத்துள்ள நிலையில், பாடசாலைகள் மூடப்பட்டும் போக்குவரத்துகள் தடைப்பட்டும் உள்ளன.

இந்நிலையில், பொதுப் பரீட்சைகள் நடைபெறவுள்ளமை மாணவர்களையும் பெற்றோரையும் பீதிக்கு உள்ளாக்கும் செயற்பாடாகுமென, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, பரீட்சைகள் பிற்போடப்படுகின்றன என்றும், அதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் உடனடியாக கல்வி அமைச்சு அறிவிக்க வேண்டுமென, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.