உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவை அத்தியவசியத்தின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடக பேச்சாளராக இருந்த ஜாலிய சேனாரத்ன காங்கேசன்துறை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரியாஜ் பதியுதீன் கைது விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்தே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

 இடமாற்றம் வழங்கப்பட்டவர்களில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 8 பேர், சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர்கள் ஒருவர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் காலி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் கே.என்.ஜே வெதசிங்க மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.