பொது மக்கள் சுகாதார துறை மற்றும் வைத்தியர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம் என்று தாம் எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டுக்கொள்வதாக சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 தற்போது கொரோனா கொத்தணி தொற்றில் இருந்து சமூக தொற்றாக மாறியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச இன்று பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலமான கேள்வியின் போது சுட்டிக்காட்டினார்.

(இதன் போது சபையில் கூச்சல் குழப்பநிலை ஏற்பட்டது. இதற்கு மத்தியில் அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்).

hjhioஎதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச: வைரஸ்தொற்று கொத்தணி சமூக தொற்றாக மாறியுள்ளது. குளியாப்பிட்டியில் வைரஸ் தொற்று தொடர்பான பீ.சி.ஆர் பரிசேதனையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சுகாதார அமைச்சர் விளக்கம் அளிக்கவேண்டும்.

சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி: இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் தெளிவாக பதிலளித்தேன். இந்த வைரஸ் தொற்று தொடர்பாக சுகாதார பிரிவின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவிக்கவில்லை. வைரஸ் தொடர்பான தகவல்கள்; கிடைத்த உடன் அது தொடர்பாக உடனடியாக செயல்பட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். வைரஸ் தொற்றில் முதலாவது மற்றும் இரண்டாவது நபர்கள் (கன்டக்ஸ்) அடையாளம் காணப்பட்டவுடன் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் எதிர்கட்சிக்கு எந்த வித தெளிவும் இல்லை.

எதிர்கட்சி தலைவர்: வைத்தியர்கள் இது தொடர்பாக மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையின் உண்மைநிலையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. சமூக பரவலாகவே அவர்கள் இதனை குறிப்பிடுகின்றனர்.
(இந்த சந்தர்ப்பத்தில் சபையில் கூச்சல் குழப்ப நிலை)

சபாநயகர் : கட்சிதலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பாக பேசி விவாதத்தை ஏற்படுத்துவது குறித்து தீர்மானத்தை மேற்கொள்வோம் தற்போது அமைதியாக இருங்கள்.

சுகாதார அமைச்சர் : எதிர்க்கட்சி தலைவர் கூறியதையே கூறுகின்றார். யால ஹோட்டலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சென்றபோது அங்கு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடன் நாம் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டோம். இதற்கு சுகாதார பிரிவினரும் வைத்தியர்களும் உடனடியாக செயல்பட்டனர் என்பதை கூற விரும்புகிறேன். பொது மக்கள் சுகாதார துறை மற்றும் வைத்தியர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம் என்று தாம் எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டுக்கொள்வதாக சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே - இதற்கு எதரிக்கட்சி தலைவரின் கோளாரே காரணமாகும்.

எதிர்கட்சி தலைவர் வைத்தியர்கள் சங்கம் வைரஸ் சமூக பரவல் என்றே கூறுகின்றது ஆனால் அரசாங்கம் அதனை மறுக்கின்றுது.
(சபையில் கூச்சல் குழப்பநிலை)

சுகாதார அமைச்சர் : எதிர்க்கட்சி தலைவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுப்பட்ட போதும் இண்டர் நெட் மூலமாக மருந்துகளை விநியோகிப்பதாக தெரிவித்தார். ஆசிய பிராந்திய நாடுகளில் இலங்கையிலேயே கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு பீ.சி.ஆர் பரிசேதனை மேற்கொள்ளப்பட்டது. குறுகிய காலத்திற்குள் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.