பேலியகொடை மீன் சந்தை தொகுதியிலுள்ள 49 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மீன் சந்தை தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அங்குள்ள 100 பணியாளர்களுக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையிலேயே 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாடலாவிய ரீதியில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலர் பேலியகொட மீன் சந்தையுடனும் தொடர்பில் இருந்ததனையடுத்தே அங்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.