யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டின் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக சீனா உதவியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினால் நாடு கடன் வலையில் சிக்கவில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று (28) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 இலங்கை மக்கள் இறைமை மற்றும் சுதந்திரத்தை அனுபவித்து முன்னேற்றம் அடைவதும் நிலையான அபிவிருத்தி அடைவ​துமே எமது நாட்டின் நோக்கமாகும் எனவும் இருப்பினும் சீனாவின் நோக்கம் வேறுபட்டதாக இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஏற்கனவே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.