எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

21.4.2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காத்தான்குடி மற்றும் காத்தான்குடியை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 61 பேரினதும் விளக்கமறியல், ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மாவட்டங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் கைதுசெய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், மட்டக்களப்பு நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று (05) ஆஜர்படுத்தப்பட்டபோதே, விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டது.

இந்தச் சந்தேகநபர்கள் அனைவரும்  நாட்டின் வெவ்வேறு சிறைச்சாலைகளில் இருந்து கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.