13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட்போட்டித் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் (05) டுபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிகாணும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கெப்பிட்டல் அணியும் போட்டியை எதிர்க்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் 6 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோல்வி அடைந்த டெல்லி கெப்பிட்டல் அணி, இரண்டாவது ப்ளே ஓப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன்  நாளை மறுதினம் (07) போட்டியிட்டு வெற்றி பெற்றால், இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இன்னொரு வாய்ப்பும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.