ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே மற்றும் அரவிந்தகுமார் ஆகிய இருவருக்கும் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியில் ஆசனங்களை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதான படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.